வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி: திருச்சியில் சோகம்!

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், உய்யக்கொண்டான் கால்வாய் செல்கிறது. இங்கு பொதுமக்கள் குளிப்பது வழக்கம்.

இன்று காலையில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உய்யக்கொண்டான் வாய்க்காலில்  குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள், அந்த நபரை காப்பாற்ற முயற்சித்தும், பலனில்லை.

இச்சம்பவம் குறித்து, உடனடியாக காவல் துறையினருக்கு, அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் அங்கு வந்த செசன்ஸ் கோர்ட் காவல் துறையினர் நீரில் மூழ்கி உயிருழந்தவரின் உடலை மீட்டனர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விவரங்கள்தெரியாத நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!