நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் இவர்தான்.
இவரது நடிப்பில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் இருந்து வருகிறது. நடிகர் விஜய் தனது ‘மக்கள் இயக்கம்’ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் கம் குறித்து இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ”நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. ”விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.