வெறிச்சோடிக் காணப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்.. வருத்தத்தில் உள்ளூர் பொதுமக்கள்

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய  சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியே பெரும்பாலான மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாபரவல் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக இன்று முதல் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் சுற்றுலாவிற்கு எந்த ஒரு தளர்வும் அறிவிக்கப்படாததால் சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட் ,குணாகுகை ,பில்லர்ராக் ,பைன் மரக்காடுகள் ,பேரிஜம் ஏரி , மற்றும் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா , செட்டியார் பூங்கா , ரோஜா பூங்கா உள்ளிட்ட  தலங்கள் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிசோடிகாணப்படுகிறது.

எனவே தமிழக அரசு சுற்றுலாவிற்கு தகுந்த கட்டுப்பாடுகள் விதித்து சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டுமென உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

 

 

 

Translate »
error: Content is protected !!