வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அச் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மோடியின் உருவப்படத்தை எரித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதனை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Translate »
error: Content is protected !!