வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு.. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து  66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை அணைக்கு  தண்ணீர் வரத்து இருந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம்  66 அடியாக உயர்ந்ததால் வைகையாற்றின் கரையோரங்களில் வசிக்கும் பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்

Translate »
error: Content is protected !!