வைரலான விஜய்யின் மாஸ்டர் திரைப்பட பாடல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

தமிழில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தான் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத், சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் ‘Quit Pannuda’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டார்கள். வெளியான சில நிமிடங்களில் லட்சத்திற்குமேல் பார்வையாளர்களை கடந்தது. மேலும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நான் சொன்ன கேட்பியா என்ற வரி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!