கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், கோயிலுக்கு சென்றபோது 2015-ம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது, இருவர் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 15 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. தொடர்ந்து 11பேருக்கும் தண்டனை தொடர்பான விவரம் வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!