பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து
சான்றிதழ் பெற பள்ளிக்கு வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.