11ம் வகுப்பு படிக்கும் மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை,

சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேஸ்புக்கில் பழகி சேலத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

 சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த நடுத்தர வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் துப்புரவு வேலை செய்து வரும் இவளுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் மாணவி கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அது தொடர்பாக பெண்ணின் தாய் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காணாமல் போன மாணவியின் செல்போன் நம்பர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றை போலீசார் தோண்டித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பேஸ்புக்கில் வாலிபர் ஒருவருடன் மாணவி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி இருக்கும் இடமும் தெரியவந்தது. அதனையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியுடன் புகைப்படத்தில் இருப்பது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சேலத்திற்குச் சென்று மாணவியை மீட்டனர்.  

வாலிபர் விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தியதில் பேஸ்புக்கில் பழகி ஆசை வார்த்தைகள் கூறி சேலத்திற்கு கடத்தி சென்று பாலியியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!