2021 சட்டசபை தேர்தல்… கமல் தரும் டிவிஸ்ட் … திமுக , அதிமுகவிற்கு இணையான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டி

சென்னை,

2021 சட்டசபை தேர்தலில் திமுக , அதிமுகவிற்கு இணையான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதாக தகவல்கள் வருகிறது. மூன்றாவது அணி அமைத்து மிகப்பெரிய அளவில் மக்கள் நீதி மய்யம் களம் காணும் என்று கூறப்படுகிறது.

2021 சட்டசபை தேர்தலுக்கு ஆளும் கட்சியான அதிமுகவும் சரி, எதிர்க்கட்சியான திமுகவும் சரி. மிகவும் பெரிய அளவில் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது. கண்டிப்பாக இந்த தேர்தலில் பெரிய அளவில் போட்டி நிலவும் என்று தெரிந்து இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிந்த அளவு பலப்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில். நாங்க மட்டும் சும்மாவா. நாங்களும் பெரிய படையை உருவாக்க போகிறோம் என்று மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான முன்னெடுப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த மூன்றாவது அணியில் எப்படியாவது காங்கிரசை கொண்டு வரலாம் என்று மநீம முயன்றது. திமுக கூட்டணியில் அதிக இடம் கிடைக்காததை பயன்படுத்தி காங்கிரசை வளைக்க மய்யம் முயன்றது. ஆனால் காங்கிரஸ் கடைசியில் 25 தொகுதிகளோடு திமுக கூட்டணியில் ஐக்கியம் ஆகிவிட்டது. ஆனால் மனம் தளராத மநீம தொடர்ந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் முடிவில் இருக்கிறது.

சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் மநீம கூட்டணி வைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் இதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். இரண்டு மூன்று இடங்களில் கூட்டணி குறித்து சரத்குமார் வெளிப்படையாக பேசினார். ஆனால் கமல்ஹாசன் இதை பற்றி பெரிதாக எங்கும் பேசவில்லை.

கை கொடுத்தாலே கூட்டணி என்று சொல்ல வேண்டாம். கூட்டணி முடிவு எடுக்கப்பட்டால் அதை அதிகாரபூர்வமாக சொல்வோம். இப்போதே கூட்டணி என்றெல்லாம் பேச வேண்டாம் என்று குறிப்பிட்டார். சரத் உறுதியாக கூட்டணி என்று சொல்லும் போது கமல் மட்டும் இப்படி பட்டும் படாமல் பேசியது ஏன் என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில்தான் மநீமசமகஐஜேகே கூட்டணியில் மநீம 150க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட போவதாக தகவல்கள் வருகிறது.

அதன்படி சமகவிற்கு 34 இடங்கள், ஐஜேகேவிற்கு 34 இடங்களை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கும். மக்கள் நீதி மய்யம் குறைந்தது 150-160 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. கூட்டணியில் இப்படி அதிக இடங்களை பெறுவதற்காகவே மநீம கொஞ்சம் பட்டும் படாமல் செயல்பட்டது என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 180+ இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளது.

அதேபோல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிட்டத்தட்ட 165+ இடங்களில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது. இந்த கட்சிகளுக்கு இணையாக போட்டியிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது அணியை இந்த தேர்தலுக்கு மட்டுமின்றி எதிர்காலத்திலும் வழி நடத்தும் திட்டம் மநீம கட்சிக்கு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இதுதான் 160+ இடங்களை மநீம எடுத்துக்கொள்ள காரணம் என்கிறார்கள். அதோடு கமல்தான் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதையும் சரத் அறிவித்துவிட்டார். இதில் துணை முதல்வர் வேட்பாளர் பதவியை சமக கேட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இதை கமல்ஹாசன் விரும்பவில்லை என்றும். இதனால்தான் இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் தகவல்கள் வருகிறது.

 

Translate »
error: Content is protected !!