உலக சுற்றுலா தளமான கொடைகானலில் சாலைகள் வலு இழந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி…

உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானல் தன்னுடைய தகுதியை சாலைகள் மூலம் இழந்து வருகிறது. படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தளம் உலக நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம் .. இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்தாலும் தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியிருக்கிறார்கள் கடந்த வருடம் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை கொடைக்கானலுக்கு வருகை தந்திருந்தார்கள். வருடத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம் இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானலில் இருக்கக்கூடியபொது மக்கள் பெரும்பாலும் மலைச்சாலையே பயன்படுத்துகிறார்கள். கொடைக்கானலில் இருக்கக்கூடிய சாலைகள் நெடுஞ்சாலை துறை மற்றும் கொடைக்கானல் நகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது பிரதான சாலையான வத்தலகுண்டு – கொடைக்கானல் பழனி – வத்தலகுண்டு சுற்றுலாத்தலங்கள் ஏரிசாலை உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும் நகர்ப்பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் நகராட்சி சார்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது… மழை காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ,பாறை உருண்டு விழுதல் உள்ளிட்டவைகள போக்குவரத்து பாதிக்கப்படும். இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை .மேலும் தற்போது நாம் பார்க்கக் கூடிய இந்த சாலைகள் கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அல்ல கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் நெடுஞ்சாலை துறை சார்பாக கோடிக்கணக்கில் சாலைகள் டெண்டர் விடப்படுகிறது . தற்போது கூட 45 கோடி ரூபாய்க்கு மேல் பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது இந்த 45 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் நடை பெற்றாலும் கூட அந்த பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . முக்கியமாக கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் ..இந்த சாலை கடந்த பல மாதங்களாகவே பராமரிப்பு பணியில் இருக்கிறது இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுவதில்லை மேலும் அந்த இடங்களில் பல்வேறு கனரக வாகனங்கள் சாலை பணிக்காக இயக்கப்படுவதால் மேலும் சாலைகள் நலிவடைய தொடங்குகின்றது ..இதே போன்று பெரும்பாலான மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாம்பார் புரம் சாலையும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது.  மேலும் இந்த 45 கோடி ரூபாய்க்கு வேலை கொடுக்கப்பட்டாலும் இந்த வேலைகளை முறையாக அதிகாரிகள் கவனிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது பெயரளவுக்கு முடிக்கக்கூடிய இந்த வேலைகள் அடுத்த மழை காலம் வரும் முன் மீண்டும் அதே வேலை வருவதாக கொடைக்கானல் மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். இது மட்டுமல்லாது பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்திலும் பழுதடைந்து ஆங்காங்கே நிற்கக்கூடிய ஒரு சூழ் நிலையும் ஏற்பட்டிருக்கிறது அதிகாரிகள் முறையாக இந்த சாலை பணிகளை கவனிக்காததால் இதுபோன்ற நிலை கொடைக்கானலில் பல வருடங்களாகவே தொடர்கிறது என்று கோடை மக்கள் குமுறுகிறார்கள். மேலும் கொடைக்கானலில் நடைபெறக்கூடிய டெண்டர்கள் ஆளும் கட்சியினர் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதால் அந்த வேளையில் அதிகாரிகள் முறையாக கவனிப்பதில்லை ..மேலும் உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் அடிப்படை வசதிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாலை வசதியை முழுவதுமாக மேம்படுத்தி உலக மக்கள் அனைவரும் வந்து சென்று பார்ப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் ஏற்படுத்தித் தரவும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.      

நோபல் வேர்ல்ட் ரெகார்ட் : சிலம்பாட்ட பயிற்சி பள்ளி 250 மாணவர்களை கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் இரட்டை கம்புகளை சுழற்றி சாதனை

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி 250 மாணவர்களை  கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் இரட்டை  கம்புகளை சுழற்றி சாதனை.  தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிக்காக 250  சிலம்பப்…

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது…

டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…

40-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்! மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம்…

கோரோனோ ஊரடங்குக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும்…

தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு வியோகம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை இன்று அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை,…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர திட்டமிட்டுள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 14 ஆம் தேதி சென்னை வர  உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, …

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா குறைந்த அளவிலான பக்தர்களுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா திருமாமணி மண்டபத்தில் குறைந்த அளவிலான பக்தர்களுடன் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சியுடன் நிறைவு 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த…

எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ்…

Translate »
error: Content is protected !!