தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. 

மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும், சோமாலியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வந்த 7 வயது சிறுமிக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!