நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 70 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை தவிர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5, 58, 07,125 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.