திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க ஸ்ரீகாந்துக்கு 5 ஏக்கர் நிலம் – ஆந்திர முதல்வர்

சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். திருப்பதியில் பேட்மிண்டன் அகாடமி அமைக்க ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் உதவி கலெக்டராக பணிபுரியம் ஸ்ரீகாந்த் கூறியதாவது, தனக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். திருப்பதியில் உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாடமியை உருவாக்குவேன் என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!