தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அமல் – அரியானா அரசு

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரியானா அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன் மூலம், அம்மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைகள் இனி ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்கப்படும். ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இனி தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக மாதம் 30,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலைகள் வழங்கப்படும்.

ஹரியானா மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை அரியானா இளைஞர்களுக்கு வழங்கும் மசோதா 2020ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

அதற்கு ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த மசோதா தற்போது சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டம் தற்போது அமலில் வந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 75 சதவிகிதம் பேர் தற்போது ஹரியானாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!