78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது..
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்களும் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது..