கருவாடுகளை இலங்கையில் இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை…ரூ.500 கோடி மதிப்புள்ள கருவாடுகள் தூத்துக்குடியில் தேக்கம்…மீனவர்கள் வேதனை

தமிழகத்தில் உள்ள கருவாடுகளை  இலங்கையில் இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளதால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தூத்துக்குடியில் தேக்கம்அழுகும் நிலையில் உள்ளதாக மீனவர்கள் வேதனை…

இந்தியாவில் உள்ள அனைத்து கடலோர மாநிலத்திலிருந்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில் சுமார் 17% சதவீதம் மீன்கள் பதப்படுத்தப்பட்டு உயர்ரக கருவாடாக பல்வேறு முன்னணி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

தற்போது அண்டை நாடான இலங்கை.., இந்தியாவிலிருந்து வரும் மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மாசி கருவாடுகள், கட்டாக்கருவாடு, தள பாத்து கருவாடு, நெத்திலி கருவாடு உட்பட பல மீன் மற்றும் கருவாடு வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

இதனால், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த நவம்பர் 2020 முதல் இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடு வகைகள் இறக்குமதி செய்வதை இலங்கை தடை விதித்துள்ளது.

கருவாடு களுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ கருவாடு க்கு 100 ரூபாய் வரி இருந்ததை தற்போது 300 ரூபாயாக உயர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அதாவது மாலத்தீவு மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி போன்ற பகுதிகளிலிருந்து இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையின் இந்த கூடுதல் வரி விதிப்பு மற்றும் இறக்குமதிக்கு தடை போன்ற காரணத்தினால் ஏற்றுமதியாளர்கள் மட்டுமில்லாமல் மீன்களைப் பிடித்து வருகின்ற மீனவ மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கருவாடு ஏற்றுமதித் தடையால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கருவாடு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானிய விலையில் பாதுகாப்பு கிடங்குகள் கட்டவும் உபகரணங்கள் வாங்கவும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத் தொகைகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் தற்போது தேக்கம் அடைந்துள்ள சுமார் 15 ஆயிரம் டன் கருவாடுகள் சுமார் ரூபாய் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பு இருக்கின்றது. இந்த கருவாடுகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இலங்கையுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் வாடகை பாதுகாப்பு கிடங்குகளில் கருவாடுகள் பல மாதங்களாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக ராஜ்ஜிய ரீதியான உறவுகளை பலப்படுத்த இந்திய கலாச்சார உணவு வகையும்,

இலங்கை கலாச்சார உணவு வகையும் மான கருவாடு வகையை சார்ந்த மீன் கருவாடு களை அந்நாட்டில் இறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில்  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் கருவாடுகளை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Translate »
error: Content is protected !!