அமமுக வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கினார்..
ராமநாதபுரம் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.முனியசாமி சென்னை சென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துவிட்டு இன்று ராமநாதபுரம் வருகை தந்தார்.
அவர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு அவரது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் அதிமுகவுக்காக பல ஆண்டுகள் உழைத்து வந்தேன்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மணிகண்டன் சட்டமன்ற களத்திலிருந்து பணியாற்றிய நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது அமமுக வேட்பாளராக இங்கு வந்துள்ளேன் மக்களின் வெகுநாள் கனவான விமான நிலையம் உள்ள நகராட்சியாக ராமநாதபுரத்தை மாற்றுவேன் என்று பலர் வாக்குறுதி மட்டுமே சொல்லிச் செல்கிறார்கள்.
ஆனால், அதை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம் என்று மீனவர் பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு மீனவர்களுக்கு எந்த ஒரு துன்பமும் ஏற்படாமல் பாதுகாப்பு தருவோம், மேலும், ராமநாதபுரத்தில் தோல்வி அடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டத்தை துரிதப்படுத்தி முடித்து முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன் என வாக்காளர்கள் மத்தியில் கூறினார்.