திமுக எம்பி கவுதம சிகாமணியின் பல கோடி சொத்துகள் பறிமுதல்!

அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கி குற்றச்சாட்டின் பேரில், திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் கவுதம சிகாமணி. இவர், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். அவருக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிய செலாவணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்த புகாரில் அடிப்படையில், அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, கவுதமசிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமலாக்கத்துறை வட்டாரங்களில் கூறுகையில், அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தன.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!