பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி 398 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் துவக்கம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தனித் தொகுதியில் 398 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதியில் உள்ள 398 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் காலை 9 மணிக்கு பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல மூன்று மணிநேரம் காத்திருந்தனர்.
`இதனை அடுத்து காலதாமதமாக மதியம் 12 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தலுக்கான உபகரணங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு தனித்தனியே வாகனங்கள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பணியாளர்களுடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.