பெரும் எதிர்பார்ப்பில் கோவை… அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள்.. அதனால் தான் இரண்டா..!

சென்னை,

நாளைக்கு நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், கமல் போட்டியிடும் தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில், விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.

வேட்பாளர் லிஸ்ட் வெளியானதில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இதுவாகும். பிரச்சாரத்தின் துவக்கம் முதல் இறுதிவரை, அரசியல் களம் களை கட்டி வரும் தொகுதியும் இதுவாகும். இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு வானதியும், கமலும் டஃப் தந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை ஜரூராக நடந்து வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டலத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன.. இதில் கோவை தெற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளதோ அதே அளவுக்கு இந்த கோவை மண்டலமே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அதற்கு காரணம், இந்த தொகுதிகளில் அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள் களமிறங்க போகிறார்கள்.

எனவேதான், 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 20 சதவீதம் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதால், 142 இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.. பேட்டரி பேலட் ஷீட் பொருத்தி அவைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் உள்ள ஒரு கிளாஸ் ரூமில் அவை வைக்கப்பட்டுள்ளன. இதைதவிர, ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்களும் அங்கு தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கிளாஸ் ரூமில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதுவடகோவை, ரங்கநாதபுரம், சித்தாபுதுார், கருப்ப கவுண்டர் வீதி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளிகளில், மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.எல்லாவற்றிற்கும் மேலாக, நாளை எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்..!

 

Translate »
error: Content is protected !!