முறையாக ஊதியம் வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக துப்புரவு பணியாளர் போராட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக முறையாக ஊதியம் வழங்காததால் குடும்பச் செலவிற்கு கூட பணமின்றி தனது குடும்பம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர் ராஜேந்திரன் என்பவர் மாலை தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக குடும்பத்தினருடன் அரளி விதை என்ற விஷத்தன்மை வாய்ந்த காய்களுடன் தற்கொலை செய்யப்போவதாக பேரூராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் நாளை அவருக்கான உரிய ஊதியம் வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர் விஷ காய்களை தூக்கி எறிந்த பின்பு தனது போராட்டத்தை கைவிட்டு சென்றார். மேலும் நாளை ஊதியம் வழங்காவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் தான் பொறுப்பு என கூறிச் சென்றார்.