பாரம்பரிய இயற்கை பதநீர் நுங்கு.. ஶ்ரீரங்கம் மக்களிடையே அமோக வரவேற்பு – வெயிலுக்கு அதிகம் விரும்பி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

பாரம்பரிய இயற்கை பானமான பதநீர் நுங்கு விற்கு ஶ்ரீரங்கம் மக்களிடையே அமோக வரவேற்புவெயிலுக்கு அதிகம் விரும்பி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

திருச்சியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெயிலின் வாட்டி எடுக்கிறது இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் நகர்ப் பகுதிகளில் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது, கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை பானங்களை மக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர், அதில் ஒன்றான பதநீர் மற்றும் நுங்கு வை திருச்சி மக்கள் தற்போது அதிகமாக வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர்.

பனை நொங்கு கோடைக்கு ஏற்ற சிறந்த பொருளாகும் பதநீர் சிறந்த பானமாகவும் தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஏராளமான பனைத் தொழிலாளர்கள் திருச்சியிலேயே தங்கி இந்த வெயில் சீசனில் விற்பனை செய்து வருகின்றனர்.. பதநீர் 20 ரூபாய்க்கும் நுங்கு பதனீர் 30 ரூபாய்க்கு விதம்ஒரு நாளைக்கு 15 லிட்டர் வீதம் பதநீர் விற்கப் படுகிறது.. திருச்சி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் ஸ்ரீரங்கம் பகுதியில் மக்கள் அதிகமாக விரும்பி வாங்குவதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்..

Translate »
error: Content is protected !!