“சின்னக் கலைவாணர்” விவேக் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்சின்னக் கலைவாணர்என திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.. சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.

தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ! அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!