மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடல் கண்டுபிடிப்பு..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வரட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததாக எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து வால்பாறை வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ததில் பெண்யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த யானையின் வயது 25 க்கும் மேல் இருக்கும் என்பது தெரிய வந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். யானையின் உடல் அழுகி விட்டதால் எப்படி இறந்தது என்று தெரியவில்லை. வால்பாறை கால்நடை மருத்துவரை அழைத்து வந்து உடல் கூராய்வு செய்யப்பட்டது.

பின்னர், வனவிலங்குகள் உண்பதற்காக உடல் அப்படியே விடப்பட்டது. காட்டு நோய் தொற்றால் இறந்த தா அல்லது இயற்கையான முறையில் இறந்ததா என்று ஆய்வு செய்து வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Translate »
error: Content is protected !!