கோவையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தீவிரமடைந்து வரும் வேளையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை காந்திபுரம் பவர் ஹவுஸ் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உட்பட 16 பேர் மீது காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு சட்டத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

Translate »
error: Content is protected !!