சென்னையில் நேற்று மட்டும் 2,793 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை அதிரடி

சென்னை நகரில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (16.5.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக  2,716  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முகக்கவசம் அணியாத 2,925 நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத 251 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட 52 கடைகள் மூடப்பட்டு ரூ. 3,46,800 அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு காவல் சார்பில் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல் சார்பில் 118 இடங்களிலும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம் வாகனத் தணிக்கை, சுற்று ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து கொரோனா தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

சென்னை நகரில் நேற்று (16.05.2021) சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கை மற்றும் சோதனையில்  கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 330 வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், 1,227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,463 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 2,925 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 251 வழக்குகளும், அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 52 கடைகள் மூடி, சீலிடப்பட்டு, ரூ 3, 46, 800 அபராதம் விதிக்கப்பட்டதுபொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!