பெரியகுளத்தில் அனாவசியமாக சுற்றும் பொது மக்கள்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

பெரியகுளத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியும் விதிகளை மீறி வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக  பரவி வருவதால் தெருக்கள் அனைத்தும் சிறப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி நான்கு மணி நேரம் வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளதால் 10 மணிக்கு மேல் ஊருக்கள் விதிகளை மீறி வானகங்களில் சுற்றித்திரியும் நபர்களை அறிவுரை கூறி வீட்டில் இருக்குமாறு வலியுறுத்தியும்,

மேலும் அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உட்பட நகராட்சி நகர்முழுவதும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தமிழக அரசின் உத்தரவை மீறியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேறு வாகனங்களில் வரும் நபர்களை சோதனை செய்து முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்க அபராதமும் வசூல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Translate »
error: Content is protected !!