ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடு..!

.தி.மு.வில், .பி.எஸ், .பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .தி.மு.வில் ஒருங்கிணைப்பாளராக .பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக, .பி.எஸ்சும் உள்ளனர்.

இருவருக்கும் இடையே, அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும், நிர்வாகிகள் சமாதானத்திற்கு பின், சமரசம் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, .பி.எஸ்.,சை அறிவிக்க, .பி.எஸ்., சம்மதிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் வற்புறுத்தலுக்கு பின்னரே சம்மதம் தெரிவித்தார். அவரது ஆதரவாளர்களை, .பி.எஸ்., திட்டமிட்டு ஓரம் கட்டினார். கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோரை தன்வசப்படுத்தி விட்டார்.

தேர்தலில், .தி.மு.., தோல்வியை சந்தித்தது. எனினும், 66 எம்.எல்..,க்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில், .பி.எஸ்.,  .பி.எஸ்., இடையே மோதல் உருவானது. எம்.எல்..,க்களை தன் வசப்படுத்திய, .பி.எஸ்., வேண்டுமானால், ஓட்டெடுப்பு நடத்தலாம் எனக்கூற, .பி.எஸ்., பின்வாங்கியதுடன், முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை, எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தார்.

அதை கண்டு கொள்ளாமல், .பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவராகி விட்டார். துணை தலைவர் பதவியை ஏற்க, .பி.எஸ்., விரும்பாத நிலையில், அப்பதவிக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் என, அனைத்து பதவிகளுக்கும், .பி.எஸ்., குறுக்கே நிற்பது, .பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அவரை முழுமையாக ஓரம் கட்டி விட்டு, கட்சி பொதுச்செயலராக .பி.எஸ்., காய் நகர்த்த துவங்கி உள்ளார். இதை உணர்ந்துள்ள .பி.எஸ்., இனி அமைதியாக இருந்தால் நல்லதல்ல எனக்கருதி, அரசை வலியுறுத்தி, தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அவர் அறிக்கை வெளியிட, எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில், இ.பி.எஸ்., தனி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இருவரும் கட்சியின், ‘லட்டர் பேடில்’ அறிக்கை வெளியிடுவதில்லை. கட்சி லெட்டர் பேடு என்றால், இ.பி.எஸ்., அறிக்கைக்கு, ஓ.பி.எஸ்.,சிடம் அனுமதி பெற வேண்டும். இருவருடைய கையெழுத்து வேண்டும் என்பதால், வெற்று காகிதங்களில் அறிக்கை வெளியிடுகின்றனர். இருவரும் கட்சி லெட்டர் பேடு பயன்படுத்தாமல், தனித்தனியே அறிக்கைகள் வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!