சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ புதிய இயக்குநராக மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் இயக்குநராக இருந்து வரும் சுபோத்குமார் ஜெய்ஸ்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் வேறு யாரும் நியமிக்கப்படாததால் கடந்த 3 மாதங்களாக சிபிஐ இயக்குநர் பதவி காலியாகவே இருந்தது. குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் அங்கு டிஜிபியாக இருப்பார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 1985-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சுபோத்குமார் மகாராஷ்டிரா மாநில ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்தவர். இதற்கு முன் மகாராஷ்டிரா டிஜிபியாகவும் சுபோத்குமார் இருந்துள்ளார். ஜார்க்கண்ட், தான்பாத் நகரைச் சேர்ந்த இவர் ஒரு எம்பிஏ பட்டதாரிமும்பை போலீஸ் கமிஷனர், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு, மத்திய அரசின் உளவுப்பிரிவானராஆகியவற்றில் சுபோத்குமார் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!