மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காவல்துறை

மஞ்சளாறு அணை அருகில் ராசி மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மலைவாழ் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல்துறையினர் சார்பாக மஞ்சளாறு அணை அருகில் உள்ள ராசி மலை கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு  காவல் ஆய்வாளர்  பாலமுருகன் தலைமையில் கொரோனா நிவாரண பொருட்களாக  5 கிலோ அரிசிமளிகை பொருட்கள் காய்கறி மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் சார்பு ஆய்வாளர்  இத்ரீஸ் கான் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

Translate »
error: Content is protected !!