நவ. 30ம் தேதி வரை சர்வதேச விமானச்சேவைகளுக்கு தடை: மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கருதி, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டட்து. இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.

எனினும், வந்தே பாரத் மிஷனின் கீழ், மே முதல் மற்றும் ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன், சிறப்பு சர்வதேச விமானங்கள் இயங்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா இது போன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச விமானங்கள் தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான அனைத்து சரக்கு விமான நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட விமானங்களின் செயல்பாட்டை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக உள்நாட்டு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!