டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு..!

டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு..ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, டெல்லி பிரதிநிதி .கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு..ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் , கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு,மாலை 6 அளவில் செய்தியாள்கர்களை சந்திக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின் . இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் நாளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!