முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்.. ஏன்.?

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சைதாபேட்டை சிறையில் அடைதுள்ளனர்.

இந்நிலையில் சிறைச்சாலையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏசி, சோபா உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சிறைத்துறை டி.எஸ்.பி. தலைமையிலான சைதாபேட்டை சிறையில் போலீசார் நடத்திய திடீர்  சோதனையில் அவருக்கு ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறையில் மணிகண்டனுக்கு ஆடம்பர வசதிகளை வழங்கிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Translate »
error: Content is protected !!