கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வாசனைத் திரவியம் மற்றும் தைலம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறை நடைபெற்றது ஏராளமானோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சார்பாக வாசனை திரவியங்கள் மற்றும் யூகலிப்டஸ் லெமன்கிராஸ் உள்ளிட்ட பல வகைகள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் தயாரிக்கக்கூடிய அந்த வாசனை திரவியங்கள் மற்றும் தைலங்களை எவ்வாறு உயர் தொழில்நுட்பத்தில் விற்பது என்பது குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
மேலும் இந்த பயிற்சி பட்டறை தேசிய விவசாய மற்றும் கிராம வளர்ச்சி வங்கியும் இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டனர் இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் துவக்கிவைத்தார் இன்று முதல் இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த பயிற்சி பட்டறை மற்றும் செயல் திறன் குறித்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சார்பாக தெரிவிக்கப்பட்டது.