உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களில் தனுஷ் படம்..

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்தப் படம் விமரிசன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சர்வதேச நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் , உலக அளவில் பார்க்க வேண்டிய 5 படங்களைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பட்டியலில் கர்ணன் படமும் இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரே படம் கர்ணன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!