ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைங்க…

தென்காசி மாவட்டம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்,குருவிக்குளம் ஒன்றியம்,ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜமீன் தேவர்குளத்தை சேர்ந்த வெற்றிமாறன் அவரது மனைவி சவரியம்மாள் மற்றும் ராமசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்

ராமசாமி வேட்புமனுவை தவிர்த்து மற்ற இருவரின் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பிறரின் அழுத்தம் காரணமாக தான் தனது வேட்புமனு நிராகிரிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வெற்றிமாறன் தீக்குளித்து உயிரிழந்தார் ராமசாமி ஒருவரின் வேட்புமனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவர் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப் படவுள்ளார்

இது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சைமன் என்பவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆதிதிராவிடர் வகுப்பை சாராமல் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ராமசாமியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது சட்டவிரோதம் என்பதால் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!