வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் இதுவரை எந்த பதவிக்கும் முடிவுகள் அறிவிக்காததால் திமுக – அதிமுக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த திமுக வேட்பாளர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனை படம் பிடித்த செய்தியாளர் மீதும் கட்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தி செல்போனை பறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.