உதகை மலை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் ரயில் சேவை நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவுகளை அகற்றி அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததை நிலையில், மலை ரயில் சேவை வழக்கம் போல் காலை முதல் மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரயிலில் பயணம் செய்தனர்.