ஷாருக்கானுடன் ஏன் நடிக்கவில்லை- சமந்தா விளக்கம்

இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், சமந்தா அதனை நிராகரித்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கரம் பிடித்து மகிழ்ச்சியாக வலம் வந்த சமந்தா, அண்மையில்  விவகாரத்து தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் பலரும் சமந்தா தொடர்ச்சியாக நடிக்க ஆர்வம் காட்டியதே விவாகரத்திற்கான காரணம் என கூறி வந்தனர். இந்தநிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘லயன்’ என்ற பாலிவுட் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

ஏனென்றால், அவர் தாயாக திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்ததாகவும், தற்போது அதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!