விராட் கோலியின் அறிவுரைக்கு கடும் எதிர்ப்பு – சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டியைகை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாகக் கூறி இருந்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது. எங்கள் பண்டிகைகளைக் கொண்டாட எங்களுக்குத் தெரியும், அதற்கு உங்கள் ஆலோசனைகள் தேவை இல்லை என்கிற ரீதியில் சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோலியின் அந்த ட்விட்டர் பதிவு பதிலளிக்கும் வகையில் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பண்டிகை காலங்களை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து விளம்பரப்படுத்துவது உலக அளவில் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் தான். அப்படி இந்த முறை விராட் கோலி மற்றும் பின்ட்ரெஸ்ட் நிறுவனம் இணைந்து, அந்த நிறுவன சமூக வலைதளத்தை விளம்பரப்படுத்த முயற்சி செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த தீபாவளிப் பண்டிகையை அன்புக்குரியவர்களோடும் குடும்பத்தோடும், அர்த்தமுள்ளதாகக் கொண்டாட நான் சில சொந்த குறிப்புகளைப் பகிர உள்ளேன். அதற்கு என் பின்ட்ரெஸ்ட் கணக்கைப் பின் தொடருங்கள் என அக்டோபர் 17ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

இதற்கு கருத்து தெரிவித்த பலர், விராட், நீங்களும் அனுஷ்காவும் தீபாவளி, ஹோலி, தசரா, ஜன்மாஷ்டமி, சிவராத்திரி, துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி… போன்ற பண்டிகளை இந்துக்கள் எப்படி கொண்டாட வேண்டும் என வழிமுறைகளைக் கொண்ட புத்தகத்தை வெளியிட முடியுமா? எதுவெல்லாம் அர்த்தமற்ற பண்டிகை மற்றும் எதுவெல்லாம் அர்த்தமுள்ள பண்டிகை என கூற முடியுமா என்று பதிவிட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!