புற்றுநோயால் உருக்குலைந்த தமிழ் நடிகர்… உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகர் தவசி, புற்று நோயால் பாதிக்கப்பட்டு, உருக்குலைந்துள்ள படம் வெளியாகி இருக்கிறது. மருத்துவச்செலவுக்கு நிதியுதவி கேட்டு, அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி, பலரின் பாராட்டை பெற்றவர், நடிகர் தவசி. அவரது அடையாளமே பெரிய மீசையும், தாடியும், குரலும்தான். கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒரு வசனமே, இவரை எளிதாக அடையாளம் காட்டும்.

இந்த நிலையில், தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள நிதி வசதியின்றி திண்டாடி வருகிறார். சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு தவசியும், அவரது மகனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மொட்டை அடித்த கோலத்தில், எலும்பும், தோலுமாக தவசி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. உதவத் தயாராக இருப்பதாக, பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!