ஸ்விகி இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் பணிபுரிகின்றனர். இருப்பினும், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாகும். இதைக் கருத்தில் கொண்டு, ஸ்விகி பெண்களை வேலையில் சேர ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வசதி மற்றும் திட்டங்களை கொண்டு வருகிறது.
அதுபோல, பெண் ஊழியர்கள் அசௌகரியமாக உணரும் தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என ஸ்விக்கி அறிவித்துள்ளது.