அண்ணாத்த ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!