மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 27,251 கன அடியிலிருந்து 37,162 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்காக மேலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 27,251 கன அடியிலிருந்து 37,162 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 102.79 அடியிலிருந்து 105.14 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 68.50 டி.எம்.சி,யிலிருந்து 71.66 டி.எம்.சி,யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.