தமிழகத்தில் இன்று 7ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்.. சென்னையில் 600 முகாம்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 6 கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று 7ஆம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் 600 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. தடுப்பூசி மையங்களுக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி டோஸ் செலுத்தாதவர்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!