கனமழையால் நூற்றாண்டு பழமையான ஆலமரம் சரிந்தது

தஞ்சாவூரில் கனமழையால் நூற்றாண்டு பழமையான ஆலமரம் சரிந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. இந்நிலையில் ஞாயிறன்று தஞ்சாவூரில் காலை முதலே கன மழை பெய்து வந்தது.  இதனையடுத்து தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தொடர் மழையினால் அடியோடு சரிந்து அதன் அருகில் இருந்த டீக்கடையில் மரம் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் உயிர் தப்பினர்,

Translate »
error: Content is protected !!