தொடரும் மழையால் மந்தமான தீபாவளி – வியாபாரிகள் வருத்தம்

மதுரை மாநகர் பகுதிகளில் புதிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி தொழில் செய்து வரும் சாலையோர வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் திடீரென மிதமான சாரல் மழை பொழிந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி தொழில் செய்துவரும் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நனைந்தவாறு மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டு வருகின்றனர். குறிப்பாக பழங்காநத்தம் ஜெய்ஹிந்துபுரம் அவனியாபுரம் பெரியார் பேருந்து நிலையம் தெற்குவாசல் காளவாசல் திருப்பரங்குன்றம் நெல்பேட்டை உமச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!