திருச்செந்தூர் திருக்கோவிலில் 300 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த திட்டம்- தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பாா்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவில் கட்டடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீா் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், திருக்கோயிலைச் சுற்றியுள்ள பனைப் பொருள்கள், கடல் சாா் பொருள்களை விற்பனை செய்ய தற்போது உள்ளதை விட அதிகளவில் விற்பனைக் கடைகள் அமைக்கப்படும் எனவும், இப்பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனவும், ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் படி, ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தர்கார் கண்ணன் ஆதித்தன்,HCL நிறுவனத்தின் துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Translate »
error: Content is protected !!