வாழ்வில் ஒளி ஏற்றகூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் கோவிலின் கருவறைக்கு முன்புள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கொடி விருச்சிக லக்கனத்தில் காலை 6.45மணி அளவில் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள் கட்டளைதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 19ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபமும், அதன்பின்பு அன்று மாலை கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்படும் எனவும், இந்த தீப தரிசனத்தில் கலந்துகொள்ள கடந்த ஆண்டு போலவே பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.